Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அதிக கட்டணம் வசூலித்த 207 ஆம்னி பேருந்துகள்; ரூ.4.18 லட்சம் அபராதம்: அதிரடி காட்டிய போக்குவரத்து துறை

அதிக கட்டணம் வசூலித்த 207 ஆம்னி பேருந்துகள்; ரூ.4.18 லட்சம் அபராதம்: அதிரடி காட்டிய  போக்குவரத்து துறை

நேற்று வரையில் 1,222 ஆம்னி பேருந்துகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 207 பேருந்துகளில் விதிமீறல் கண்டறியப்பட்டதாகவும், அதில், ரூ.4.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.68,500 வசூலிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகம் முழுவதும் அதிக கட்டணம் வசூலித்த 207 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர் விடுமுறையால் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து கடந்த 15-ம் தேதி முதல் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நேற்று வரையில் 1,222 ஆம்னி பேருந்துகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 207 பேருந்துகளில் விதிமீறல் கண்டறியப்பட்டதாகவும், அதில், ரூ.4.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.68,500 வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக 4 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில் மாற்றுப்பேருந்து ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அதனை செய்யத் தவறினால் சம்பந்தப்பட்ட பேருந்தின் அனுமதிச் சான்று ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் 1800 425 6151 என்ற எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
தமிழக செமிகண்டக்டர் திட்டத்தில் 2 திருச்சி நிறுவனங்களுக்கு இடம்
அடுத்த செய்தி
Non-tariff barriers biggest hurdle in India-China trade: FM Nirmala

தொடர்புடைய செய்திகள்